Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு நிலை குறித்து திமுகவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது,
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சனை அல்ல என்றும், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலை.
1989ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு நடந்த அவமதிப்பு.
அந்த சம்பவம் திமுக பெண்களை மதிக்கும் மனப்பான்மையை காட்டுகிறது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மீது பல பாலியல் வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகிறது, பல பெண்கள் தங்களுக்கு நேரும் அத்துமீறல்களை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா அவர்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்ட திமுக அரசு, சாதாரண பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்யப் போகிறது?”
இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்,
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு,வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ