Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 மார்ச் (ஹி.ச.)
அரசியல் விமர்சகரும், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் என கூறப்படும் பொன்ராஜ் வெள்ளைச்சாமி தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
த.வெ.க நிர்வாகிகள் பலரும் பொன்ராஜுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், த.வெ.க தலைவர் விஜயும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை இரவு சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் டி.வி.ஏ. பிரைட்டர் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.
அதில், பெண்களைப் பற்றி இணையதளத்தில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சனம் செய்த பொன்ராஜ் வெள்ளைச்சாமி என்பவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்தநிகழ்வின் போது தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மகளிர் அணி இணை அமைப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b