Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 28 மார்ச் (ஹி.ச.)
டி20 வடிவிலான கிரிக்கெட்டில் உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முக்கியமானதாகும்.
2008ஆம் ஆண்டு அறிமுகமான இந்த தொடர், ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில், 19ஆவது ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன. தொடர் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்கப் போட்டியில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
இந்த சீசனில் பங்கேற்கும் அணிகள் பின்வருமாறு:
* சென்னை சூப்பர் கிங்ஸ்
* மும்பை இந்தியன்ஸ்
* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
* சன்ரைசர்ஸ் ஐதராபாத்
* கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
* ராஜஸ்தான் ராயல்ஸ்
* பஞ்சாப் கிங்ஸ்
* டெல்லி கேப்பிடல்ஸ்
* குஜராத் டைட்டன்ஸ்
* லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
Hindusthan Samachar / JANAKI RAM