ஆத்தூர் அருகே திடீரென சாலையில் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பிகள்
சேலம், 28 மார்ச் (ஹி.ச.) சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் கடந்து சென்று வரும் நிலையில், அப்பம்மா சமுத்திரம் பகுதியில் திடீரென உயர் மின்னழுத்த கம்பிகள் சேலம்-சென்னை தேசிய
மின்கம்பிகள்


சேலம், 28 மார்ச் (ஹி.ச.)

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் கடந்து சென்று வரும் நிலையில், அப்பம்மா சமுத்திரம் பகுதியில் திடீரென உயர் மின்னழுத்த கம்பிகள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்தது.

இதனை பார்த்த வாகன ஓட்டுநர்கள் நல்வாய்ப்பாக சுதாரித்துக் கொண்டு சாலையிலே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக,

அம்பா சமுத்திரம், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam