சென்னை மதுரவாயலில் ரூ.5 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன
பணம் பறிமுதல்


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை தேர்தல்

இந்நிலையில் சென்னை அருகே உள்ள மதுரவாயலில் இன்று தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை நடத்தப்பட்ட போது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி ரூபாயும் டாஸ்மாக்கில் வசூலிக்கப்பட்ட பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் வட்டாட்சியர் டாஸ்மாக் ஊழியர்களிடம் உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam