Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து இரு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
அரசு பள்ளியில் 5வது படிக்கும் இவரது 10 வயதுடைய இளைய மகள் நேற்று முன்தினம் இரவு வீட்டருகே உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றுள்ளார்.
பின்னர் டியூஷன் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் சிறுமியின் தோளில் கைவைத்து வா போலாம் என கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
உடனே சிறுமி கத்தி கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து சிறுமியை மீட்டு அந்த இளைஞரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது நூர் ஆலம்(28) என்பதும் இவர் சென்னை வியாசர்பாடியில் சாலையோரம் தங்கி கிடைக்கும் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது .
மேலும் முகமது நூர் ஆலமுக்கு திருமணமாகி மனைவியும், மகனும், மகளும் உள்ளனர். பின்னர் போலீஸார் ஆலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ