Enter your Email Address to subscribe to our newsletters

கொச்சி, 28 மார்ச் (ஹி.ச.)
நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்திருப்பது, அரசின் தேர்தல் சார்ந்த தற்காலிக நடவடிக்கையே என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெபி மாதர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெபி மாதர்,
சில விசேஷ காலங்களில் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுவது போல, இப்போது ‘தேர்தல் சிறப்பு’ என்ற பெயரில் இத்தகைய தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அனைத்தும் சீராக உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கவும், விலைகளை கட்டுப்படுத்தும் முகமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது முழுமையாக தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டதாக அனைவரும் அறிந்திருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் விலை உயர்வைத் தவிர்க்கும் நோக்கமே அரசின் நிலைப்பாடாகும்
தேர்தலை மட்டுமே மையமாகக் கொண்டு, அரசு ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை தற்காலிகமாக அமல்படுத்தியுள்ளது.
தேர்தல்கள் முடிந்த பின்னர் இவ்வாறான உறுதிமொழிகள் நீடிக்காது.
என்று தெரிவித்தார்.
முன்னதாக மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலையை முன்னிட்டு, எரிபொருள் விலைகளை நிலைப்படுத்தும் நோக்கில், பெட்ரோலியப் பொருட்கள் மீதான சிறப்பு கலால் வரியை மத்திய நிதியமைச்சகம் குறைத்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.13 இலிருந்து ரூ.3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், டீசல் மீதான வரி ரூ.10 இலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM