வெள்ளத்தில் வீட்டை இழந்த பெண்- நிவாரணத் தொகையில் பங்கு கேட்கும் திமுக கவுன்சிலர் கணவர்..!
தூத்துக்குடி, 28 மார்ச் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிக கன மழை பெய்து கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடம் தெரியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில
லஞ்சம்


தூத்துக்குடி, 28 மார்ச் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிக கன மழை பெய்து கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடம் தெரியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு புதியதாக வீடு கட்ட நிவாரணத் தொகை வந்துள்ளது.

இதில் நான்காவது வார்டு வாழவிளையில் ஒரு பெண்மணிக்கு வீடு கட்ட

நிவாரணத் தொகை வழங்க 4- வது வார்டு கவுன்சிலர் புனிதாவின் கணவரும் முன்னாள் கவுன்சிலருமான திமுகவைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் பேராட்சி செயலாளருக்கு

ரூபாய் 10,000 ஆயிரமும் தனக்கு ரூபாய் 2000 என மொத்தம் 12000 ரூபாய் கேட்டுள்ளார். பன்னிரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால்தான் நிவாரணத் தொகையை விடுவிக்க முடியும் என்றும் முன்னாள் கவுன்சிலர் மிரட்டியுள்ளார்.

அதற்கு அந்தப் பெண்,

நான் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நேரில்

சந்தித்து கொடுத்து விடுகிறேன் என்று சொன்னதால், நீங்கள் எப்படி வீட்டில் இருக்கிறீர்கள் என்று பார்ப்போம் என மிரட்டியுள்ளார்.

மேலும், கவுன்சிலருக்கு

சம்பளம் கிடையாது, அதனால் 2000 ரூபாய் பணம் தாருங்கள் என எந்த அச்சமும் இல்லாமல்

பணம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam