Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அண்ணா பல்கலைக்கழகம் 2.O
சம்பவம் நடத்துள்ளது.
கடந்த முறை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார்கள். அந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றோம் ஆனால் காவல்துறையினர் அதனை மறைத்து விட்டது. அந்த உண்மையான சார் இப்போது வரை வெளிப்படவில்லை என தெரிவித்தார்.
ஒரே ஒரு குற்றவாளி தான் என காவல்துறை கூறினர். அந்த சாரை விட்டதால் புதிதாக ஒரு சார் வந்துள்ளார். அரசு அலட்சியமாக செயல்படுகிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு எனவும் கடந்த முறை உண்மையான குற்றவாளியை கைது செய்யாததால் இன்னொரு சார் வந்துள்ளார். கடந்தை முறை அவரை கைது செய்து இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது எனவும் அங்கு உள்ள கமிட்டியில் புகார் அளித்தும் கமிஷனரிடம் புகார் அளிக்க சென்று உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகம் எந்த காவல்துறை எல்லைக்குட்பட்ட வருகிறதோ அங்கு எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை இரவு 10 மணிக்கு மேலாக காவல் நிலையத்திற்கு வரவைத்து எப்ஐஆர் எழுத வைத்திருக்கிறார் இது விதிமீறல் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த பிறகு தான் அவரை கைது செய்து இருக்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொடுக்கிறார்களா என கேள்வி வருகிறது. இவ்வளவு மோசமாக அண்ணா பல்கலைக்கழகம் மாற யார் காரணம் எனவும் விசகா கமிட்டி மீதும் தாமதமாக புகார் எடுத்த காவல்துறையும் குற்றவாளி தான் எனவும் கூறினார்.
இவரோடு நின்றார்களா இல்லை இன்னும் சார்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை,
இன்னும் குற்றவாளிகள் இருக்கிறார்களா என தெரியவில்லை, சாரை சாரையாக புதிய புதிய சார்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் எனவும்
இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குற்றவாளி தான் என குற்றம்சாட்டினார்.
திமுகவினர் நடத்திக் கொண்டிருக்க கூடிய தவறான அரசால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக அரசு இன்னும் 45 நாட்களில் வந்துவிட போகிறது. அதன் பிறகு இப்போது இருக்கக்கூடிய சார் இதற்கு முன்னாள் இருந்த சார் என எல்லோரையும் கொண்டு வருவோம்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னார்.
இப்படி நடப்பதற்காக அண்ணா ஆட்சியை கொடுத்தார்.
அண்ணா பேரை கெடுப்பதற்காக இந்த காலேஜ் நடத்தப்படுகிறது.
முன்பு ஞானசேகர் இப்போது ஞானவேல் பாபு,
ஞானம் என்ற பெயரில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
நேற்றைய தினம் பறக்கும் படையினர் ஜெகத்ரட்சகன் வண்டியை பிடித்தார்கள் என்று சொல்கிறார்கள்.
பிடிச்சது சிறிய தொகை அல்ல பெரிய தொகையாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
எங்கெல்லாம் பணம் இருக்கும் என்று தேர்தல் ஆணையத்திற்கும் பறக்கும் படையினருக்கும் நன்றாக தெரியும்.
இந்த ஆட்சி போக்க வேண்டும் என்றால் ஒற்றைக் கருத்துடையவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னோம் ஆனால் கேட்கவில்லை. பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது மிகவும் தவறானது.
அதற்கு வருந்து மாட்டேன் என்று சொல்வது அதைவிட தவறானது என
தவெக பெண்களை இழிவாக பேசிய கருத்து குறித்து பதில் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ