Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 28 மார்ச் (ஹி.ச.)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி திருத்தேர் உற்சவம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில்.
இந்த கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா இம்மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான 63 நாயன்மார்கள் திருக்கூட்ட ஊர்வலம் வெள்ளிக்கிழமை காலையிலும், மாலையில் சுவாமியும், அம்மனும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
72 அடி உயரம் 5 நிலைகள் 150 டன் எடை கொண்ட திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam