கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியரிடம் ஆபாச செய்கை காட்டியவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த உறவினர்கள்
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிமுடித்து விட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தவர் வீட்டுக்கு செல்வதற்கு நின்று கொண்
Sill


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு பணிமுடித்து விட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தவர் வீட்டுக்கு செல்வதற்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியதாக தெரிகிறது.

அதற்கு அந்த பெண் மற்றும் உடன் இருந்த அவரது உறவினர்கள் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்து சிஎம்பிடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் ஆவடியைச் சேர்ந்த ராஜாராவ் என்பது தெரிந்தது.

காயமடைந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை தாக்கிய பெண்ணின் உறவினர் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், கல்லூரி மாணவர் சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் ராஜாராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ