இந்தியாவின் விமான போக்குவரத்து துறை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது - பிரதமர் மோடி
கௌதம் புத்த நகர், 28 மார்ச் (ஹி.ச.) உத்தரப்பிரதேசத்தின் ஜெவரில் அமைந்த நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம
Modi inaugurated the first phase of the Noida International Airport today


கௌதம் புத்த நகர், 28 மார்ச் (ஹி.ச.)

உத்தரப்பிரதேசத்தின் ஜெவரில் அமைந்த நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது, புத்த பகவானின் புனிதச் சின்னம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது,

நொய்டா சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் புதிய வலிமை ஆகும். இந்த விமான நிலையம் மாநிலத்திற்கு வளர்ச்சி ஊக்கியாக இருப்பதுடன், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வாய்ப்புகளையும் உருவாக்கி தரும்.

இந்தியாவின் விமான போக்குவரத்து துறை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. புதிய விமான நிலையங்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டு வருவதுடன், நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்களும் வந்து கொண்டிருக்கின்றன. இவை, இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதற்கு வேண்டிய பயிற்சிக்கான வசதிகளையும் அரசு விரிவாக்கம் செய்து வருகிறது.

நம் நாட்டில் விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் (எம்.ஆர்.ஓ. துறை) பணிக்காக, 85 சதவீதம் வரை வெளிநாடுகளுக்கே விமானங்களை கொண்டு சென்று சரி செய்து வந்தோம். அதனால், எம்.ஆர்.ஓ. துறையில் சுய சார்புடன் இந்தியா இருக்க வேண்டும் என முடிவு செய்து, நாடு முழுவதும் அதற்கான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

இதனால், வருங்காலத்தில் வெளிநாட்டு விமானத்திற்கும் நாம் சேவை செய்ய முடியும். அதிக வருவாயையும் ஈட்ட முடியும்.

மேற்காசியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இந்த சவாலை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு, மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையே இந்தியா பெருமளவு சார்ந்துள்ளது.

இந்த சுமை நாட்டிலுள்ள குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் மீது விழாமல் அரசு உறுதி செய்து வருகிறது.

தன்னுடைய குடிமக்களை பாதுகாக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் நாடு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b