Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச)
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரான ஜி.கே. தமிழ்க்குமரன் டெல்லியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
ஜி.கே.எம் தமிழ்க்குமர லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
'பொன்னியின் செல்வன்', 'இந்தியன் 2', 'வேட்டையன்' போன்ற பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு வெளியான 'என்றென்றும் புன்னகை' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பா.ம.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான 'மக்கள் தொலைக்காட்சி' குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார்.
2006 -ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வென்ற திமுகவின் பெரியண்ணன் காலமானார்.
இதனால் இந்தத் தொகுதிக்கு 2010 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பா.ம.க சார்பில் ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், 'நலம் காக்கும் அணி' சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
இவர் மொத்தம் 788 வாக்குகள் பெற்று, தனது எதிரணியைச் சேர்ந்த தேனாண்டாள் முரளியை (241 வாக்குகள்) தோற்கடித்தார்.
இது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரு வேட்பாளர் பெற்ற மிக அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் , அன்புமணி வகித்து வந்த பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு தமிழ்க் குமரன் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட 3 மாதத்தில், அதாவது டிசம்பர் மாதத்தில், அந்த பதவியில் இருந்து தமிழ்க்குமரன் விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b