பெரம்பூரில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கும் அரசிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, 28 மார்ச் (ஹி. ச) சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் 100 பேர்
Masu


Vijay TVK


சென்னை, 28 மார்ச் (ஹி. ச)

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள

சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் 100 பேர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை பகுதியிலிருந்து அதிமுக இளைஞர் அணியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டதாகவும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தினம்தோறும் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர் என்றார்.

மாற்றுக் கட்சி என்று சொல்கிறீர்கள் அவர்களிடம் உறுப்பினர் அட்டை உள்ளதா என்ற கேள்விக்கு.?

இவர்கள் அதிமுக இளைஞர் அணியைச் சார்ந்தவர்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் உறுப்பினர் அட்டையை காட்ட சொல்கிறேன்.

இங்கு வந்திருப்பவர்களை கேட்டால் மீட்டிங் அழைத்தார்கள் வந்தோம் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு?

அதுபோன்று யார் சொன்னது? அப்படியே மீட்டிங்கு கூப்பிட்டாலும் இப்போது திமுகவில் சேர்ந்து உள்ளார்களே சந்தோசம் தானே அதில் உங்களுக்கு என்ன சங்கடம் என பதிலளித்தார்.

பெரம்பூரில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

முதலில் அனுமதி யார் கொடுப்பார்கள் என்று தவெகவினர் தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே என்ன நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்று தகவலை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு 48 மணி நேரத்திற்குள் அனுமதி கிடைத்து விடும் இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கேள்வி எழுப்பிய அவர் கூட்டங்கள் நடத்த அனுமதி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே என்றார்.

அவர் சொல்கிறார் என்பதற்காக அனுப்பி கேட்க முடியுமா?

48 மணி நேரத்திற்கு குறைவாக அனுமதி கூறும் எல்லா கடிதத்தையும் தேர்தல் ஆணையம் நிராகரித்து விடுகிறது அதற்காக திமுகவும் அரசும் எந்த வகையில் பொறுப்பேற்க முடியும்.

தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கிய பிறகு அரசு அதிகாரிகள் ஏதேனும் தொல்லை கொடுத்திருக்கிறார்களா என்று ஆதாரம் காட்ட சொல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ