Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
சென்னையில் இன்று அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, நேற்று விஜய்மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்ராஜ் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் நேரில் வந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காவல் ஆணையராக அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விஜய் தலைமையிலான தவெக ஆதரவாளர்களும், பொன்ராஜ் மீது புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் வந்தால் பதற்றம் உருவாக வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு வலுப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ