இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா
கோவை, 28 மார்ச் (ஹி.ச.) ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் நினைவு மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது. இந்த விழாவின் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மருத
u


கோவை, 28 மார்ச் (ஹி.ச.)

ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் நினைவு மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது.

இந்த விழாவின் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். கீதாஞ்சலி அவர்கள் கலந்து கொண்டார்.

SNR Sons Charitable Trust நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

மேலும் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார் அவர்கள், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால் அவர்கள், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன், கல்லூரி முதல்வர் டாக்டர் பி. சத்யா அவர்கள் ஆகியோர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தனர்.

மொத்தம் 130-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவியர்கள் இணை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்றனர்.

துறை வாரியாக முதலிடம் பெற்ற 10 மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு, மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.

Hindusthan Samachar / Durai.J