Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 28 மார்ச் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த 45 வயது பெண் வசித்து வருகிறார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து ஒரு மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். மகள் திருமணம் முடிந்து அதே பகுதியில் வேறு வீட்டில் கணவருடன் இருப்பதால் மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த பெண் உதகையில் உள்ள ஒரு ஓட்டலில் பணி செய்து வந்துள்ளார்.
தினமும் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்துவிட்டு இரவு 8 மணிக்குமேல் பணி முடிந்து வீடு திரும்புவார்.
இந்தநிலையில் 6-8-2024 அன்று பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது மரவியல் பூங்கா சாலை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வழிமறித்து அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டு உள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அவர் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள கூச்சலிட்டுள்ளார்.
இந்த சத்தம் அருகில் இருந்த யாரையும் சென்று சேராததால் உதவிக்கு யாரும் வரமுடியவில்லை.
இதற்கிடையே அந்தப் பெண் போராடி பார்த்தும் தப்பிக்க முடியவில்லை, அந்த வாலிபர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்தான புகாரின் பெயரில் உதகை மத்திய காவல் நிலைய போலீசார் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி, நீண்ட தேடுதலுக்கு பிறகு ஊட்டி தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி குற்றவாளி சதீஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எம்.செந்தில் குமார் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN