'களத்தில்_இளைஞர்_அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரம் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியில் உள்ள இளைஞர் அணியின் 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்டு ''களத்தில்_இளைஞர்_அணி'' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இ
'களத்தில்_இளைஞர்_அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரம் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியில் உள்ள இளைஞர் அணியின் 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்டு 'களத்தில்_இளைஞர்_அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

தி.மு.கழகத்தின் முதன்மை அணியான திமுக இளைஞர் அணிக்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகளிலும், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகளிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, மிகப் பெரிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

சட்டமன்றத் தேர்தலில், கழக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பேரில், தலைமைக் கழக ஒப்புதலுடன், இளைஞர் அணியின் 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்டு 'களத்தில்_இளைஞர்_அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.

ஒவ்வொரு பாகத்திற்கும் உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சேர்த்து, அந்த பாகத்தில் கழகத்தின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட 10 இளைஞர்கள், பாக வாரியாக இளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கழகத் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பார்கள். தேர்தல் நாளான 23.04.2026-க்குள் இரண்டு முறை வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார்கள்.

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்ற உறுதியுடன் நம் மாநிலத்தின் உரிமைகளை, டெல்லிக்கு அடகு வைக்கத் துடிக்கும் அடிமைகளின் எண்ணத்தை மக்களிடம் எடுத்துரைப்போம், அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! கழகத் தலைவர் தலைமையில் #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b