Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள், தமாகா 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 28) காலை வெளியிட்டுள்ளார்.
இதில், G. செந்தமிழன், C.சண்முகவேல் ஆகிய இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் வாய்ப்பளித்துள்ளார்.
11 வேட்பாளர்கள் விவரம்:
திருவையாறு: V. வேலு கார்த்திகேயன்
காரைக்குடி: தேர்போகி V. பாண்டி
நாங்குநேரி: R. இசக்கிமுத்து
ஒட்டப்பிடாரம் (தனி) : இரா. சுந்தர் ராஜன்
சைதாப்பேட்டை: G. செந்தமிழன்
திருப்பத்தூர்: ஞானசேகரன்
மன்னார்குடி: எஸ்.காமராஜ்
பூவிருந்தவல்லி: ஏழுமலை
பெரியகுளம் (தனி) : K. கதிர்காமு
மடத்துக்குளம்: C.சண்முகவேல்
திருச்சி மேற்கு: M.ராஜசேகரன்
இதனை தொடர்ந்து 120 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்.
அதில் முக்கியமான வாக்குறுதிகள் பின்வருமாறு:
* 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்ளாக உயர்த்தப்படும்.
*விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
*ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம்.
* ஆண்களுக்கு சுய உதவி நிதி வழங்கப்படும்.
*மதுரையை போல் வட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.
* ஜெயலலிதா, முத்துராமலிங்க தேவர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்.
* கச்சத்தீவை மீட்க வலியுறுத்தப்படும்; கனிம வளக்கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என்பன போன்ற 120 வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது,
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில் இருண்ட காலம் நடந்து கொண்டிருக்கிறது. அதை விரட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும்.
நாங்கள் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடவிருக்கிறோம். தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக அமைதிப் புரட்சி தான் செய்வார்கள். சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
திமுக பாஜகவை காட்டி பயமுறுத்துகிறது. ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சி நடக்கிறது. இதை மாற்ற அம்மாவின் ஆட்சி வரவேண்டும். முதல்வருக்கு பயம் இருக்கிறது. அதனால் தான் அனைவரையும் கூட்டணியில் சேர்க்கிறார். அவர்கள் தோற்றகப்போகும் கூட்டணி.
நானும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து தஞ்சாவூர் மற்றும் ஆண்டிபட்டியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b