அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக்குழுவின் பரிந்துரையின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொது
Releases List of Candidates


Releases List of Candidates


Releases List of Candidates


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக்குழுவின் பரிந்துரையின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக கீழ்காண்பவர்கள் கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறார்கள்.

1) மடத்துக்குளம் (126) : திரு.C.சண்முகவேலு M.A., அவர்கள் முன்னாள் அமைச்சர் கழக துணைப்பொதுச்செயலாளர் திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர்

2) சைதாப்பேட்டை (23) : திரு.G.செந்தமிழன் M.A., ML., அவர்கள் முன்னாள் அமைச்சர் கழக துணைப்பொதுச்செயலாளர் தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் கழக செய்தி தொடர்பாளர்

3) திருச்சிராப்பள்ளி மேற்கு (140) : திரு.M.ராஜசேகரன் M.Com., Ex.MLA., அவர்கள் கழக தலைமை நிலையச் செயலாளர் திருச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் கழக செய்தி தொடர்பாளர்

4) பெரியகுளம் (தனி) (199) : K. கதிர்காமு MS., Gen. Surgeon, Ex.MLA., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்

5) ஒட்டப்பிடாரம் (தனி) (217) : திரு.இரா.சுந்தரராஜ் B.Sc., Ex.MLA., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்

6) பூந்தமல்லி (தனி) (5) : திரு.T.A.ஏழுமலை M.A., LLB., Ex.MLA., அவர்கள் திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர்

7) மன்னார்குடி (167) : திரு.S.காமராஜ் M.Com., B.Ed., அவர்கள் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர்

8) திருவையாறு (173) : திரு.V.கார்த்திகேயன் M.A., BL., அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர்

9) காரைக்குடி (184) திரு.தேர்போகி V.பாண்டி MBA., அவர்கள் சிவகங்கை மாவட்டக் கழக செயலாளர்

10) திருப்பத்தூர் (50) : திரு.A.ஞானசேகர் M.A., அவர்கள் திருப்பத்தூர் மாவட்டக் கழக செயலாளர்

11) நாங்குநேரி (227): திரு.R.இசக்கிமுத்து BA., அவர்கள் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக செயலாளர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b