Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 28 மார்ச் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் பாஜக முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில் 2021 தேர்தலை போல் இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தான், சட்டபேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜபாளையம் தொகுதியை ஜான் பாண்டியன் பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலின் போது ராஜபாளையம் தொகுதி தனக்கு தான் கிடைக்கும் என உறுதியாக நம்பிய கௌதமி அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் அந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த அவர், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு மீண்டும் ராஜபாளையம் தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வந்தார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக்
கழகத்தின் ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்
வழக்கறிஞரான இவர் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
ஜான்பாண்டியன் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்த நிலையில் அவரது கட்சியின் சார்பில் முதன் முதலில் பிரிசில்லா பாண்டியன் போட்டியிட உள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam