தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி - 155 விண்ணப்பங்களில் 70-க்கு மட்டுமே ஒப்புதல்
சென்னை, 28 மார்ச் (ஹி.ச.) தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னையில் நடத்தப்படவுள்ள பல்வேறு தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி விவரங்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மொத்தமாக 155 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 70 விண்ணப்பங்களுக்க
TVK Vijay


சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)

தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னையில் நடத்தப்படவுள்ள பல்வேறு தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி விவரங்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மொத்தமாக 155 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 70 விண்ணப்பங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

34 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 22 விண்ணப்பங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 26 விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதுடன், 3 விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடு தோறும் பிரச்சாரம் மேற்கொள்ள 87 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதில், 49 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக கட்சி அலுவலகம் திறக்க 18 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதில், 11க்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடத்த மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்த 17 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 7 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், 6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தெருமுனை கூட்டம் மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான விண்ணப்பங்களிலும் சில மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேரணி, பொதுக்கூட்டம், ரோடு ஷோ உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கான பல விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 6 பொதுக்கூட்ட விண்ணப்பங்கள் இதுவரை அனுமதி பெறாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வாகன அனுமதி, பேனர் மற்றும் கொடிகள் வைக்கும் அனுமதி உள்ளிட்ட விண்ணப்பங்களும் குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறவுள்ள பிரச்சார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் செயல்முறை இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ