Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய், இன்று (28.03.2026) பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இதற்காக எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தவெக தரப்பில் கடந்த 25ஆம் தேதி தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் பகுதி என்பது நெருக்கடியான இடம் என்பதாலும், அந்த இடத்தில் 3 ஆயிர பேர் கூட முடியாது என கூறி விஜய்யின் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
மேலும் மாற்று இடம் கோரி விண்ணப்பிக்க தவெகவுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியது. இந்த விவகாரத்திற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளனர் என பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து விஜய் இன்று மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பிரச்சாரம் செய்ய தனக்கு அனுமதி மறுக்கப்படுவதற்காக 10 காரணங்களையும் அவர் தனது மனுவில் பட்டியலிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b