Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 29ஆம் தேதி கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
தொடர்ந்து 30ஆம் தேதி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
அந்த வகையில், விஜய் பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் அதே நாளில் மதியம் முதல் பரப்புரையையும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், கட்சித் தலைவர் முதன்முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, மற்ற அனைத்து வேட்பாளர்களும் அவரவர் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த தேர்தலில் முதல்முறையாக களம் காணும் வேட்பாளர்கள் அதிகமாக உள்ளதால், கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் பிரமாணப் பத்திரம் தயாரிப்பதற்கான உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ