போர் பதற்றத்தால் காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி
திண்டுக்கல், 28 மார்ச் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை , வத்தலக்குண்டு மற்றும் சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தக்காளி, அவரை, பாகற்காய், காலிப்ளவர், பீட்ரூட், கத்தரிக்காய் , முருங்கை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் நிலக்கோட
vegetable seeds and organic fertilizersfor making kitchen garden


திண்டுக்கல், 28 மார்ச் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை , வத்தலக்குண்டு மற்றும் சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தக்காளி, அவரை, பாகற்காய், காலிப்ளவர், பீட்ரூட், கத்தரிக்காய் , முருங்கை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் நிலக்கோட்டை , வத்தலக்குண்டு தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அதிகாலை முதல் ஏலம் விடப்படுகிறது.

தினந்தோறும் காய்கறி வியாபாரிகள் வத்தலக்குண்டு சந்தையில் ஏலத்தில் எடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம்.

பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது மேற்காசிய நாடுகளில் போர் நடைபெற்று வருவதால் காய்கறிகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடப்பட்டு வருவதால் காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளும் விலை குறைந்து டன் கணக்கில் தேக்கமடைந்துள்ளது.

கிலோ 80 ரூபாய்க்கு விற்ற அவரை ரூ 20க்கும், 60 ரூபாய்க்கு விற்ற பாகற்காய் ரூ 10க்கும், ரூ50க்கு விற்ற கத்தரிக்காய் ரூ 10ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்ற முருங்கை பீன்ஸ் ரூ 30 ரூபாய்க்கும், ரூ 80க்கு விற்ற பீட்ரூட் ரூ 40ரூபாய்க்கும், காலிப்ளவர் ரூ 10 ரூபாய்க்கும்,

ரூ 40ரூபாய்க்கு விற்ற தக்காளி ரூ 10 ரூபாய்க்கும் ரூ 80 ரூபாய்க்கு விற்ற முருங்கைக்காய் ரூ 30 ரூபாய்க்கும் ரூ 50 ரூபாய்க்கு விற்ற சிறிய வெங்காயம் ரூ 20 ரூபாய்க்கும் விற்பனை ஆவதால் இந்த பகுதி விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் விளையும் பச்சைப் பட்டாணி கிலோ ரூ 50க்கும், பட்டர் பீன்ஸ் 70க்கும், காரட் ரூ 20க்கும் விற்பனை ஆகிறது.

காய்கறிகள் விற்பனை ஆவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறினர்.

Hindusthan Samachar / ANANDHAN