Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 28 மார்ச் (ஹி.ச.)
கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் அடுத்த சின்ன பகண்டையில் பெண்ணையாற்றின் குறுக்கே பழமையான தடுப்பணை உள்ளது. அந்த தடுப்பணையின் ஒரு பகுதி கடந்த 2024ம் ஆண்டு வெள்ளத்தின் போது சேதமானது.
இதனை சீரமைக்க டெண்டர் விட்டுள்ளனர். அங்கிருந்து, 10 கி.மீ., அருகில், விஸ்வநாதபுரத்திலும், மருதாட்டிலும் தடுப்பணை கட்டினர்.
இதனால் தண்ணீர் தேங்கி இப்பகு திகளில் விவசாயம் நன்றாக நடைபெறுகிறது. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், மேல்பட்டாம்பாக்கத்திலும் தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அங்கு ரூ.60 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.700 மீ., நீளத்துக்கு தடுப்பணையும்,ஹெட்டரும் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b