“நான் திமிர் பிடித்த திமுக காரன்” – நடிகர் போஸ் வெங்கட் உறுதி
சென்னை, 29 மார்ச் (ஹி.ச.) 14 வயதிலேயே திமுகவுக்காக வாக்கு சேகரித்தவன் நான் என்றும், 25 வயதில் கலைஞர் எழுதிய கதையில் கதாநாயகனாக நடித்து அவரின் இதயத்தில் இடம் பிடித்தவன் நான் என்றும் நடிகரும் திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். இது தொட
Bose


சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)

14 வயதிலேயே திமுகவுக்காக வாக்கு சேகரித்தவன் நான் என்றும், 25 வயதில் கலைஞர் எழுதிய கதையில் கதாநாயகனாக நடித்து அவரின் இதயத்தில் இடம் பிடித்தவன் நான் என்றும் நடிகரும் திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கலைஞர் மறைவுக்குப் பிறகு தளபதி ஸ்டாலினுடன் நெருக்கமாக பழகியவன்.

அவரது ஆதரவோடு 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்தவன்.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கலைமாமணி தேர்வு குழு, சினிமா வாரியம் மற்றும் சின்னத்திரை தேர்வு குழுவில் இடம் பெற்றேன்.

தான் முழுநேர அரசியல் பணியாளராக செயல்பட்டு வருகிறேன் என்றும், ஒரு சீட் கிடைக்காததால் கட்சி மாறுபவன் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

திமுக தான் தனது மூச்சும் பேச்சும் என்றும், தலைவரின் அன்பிற்கும் மக்கள் பணிக்கும் தான் கட்சியில் உள்ளேன் என்றும் போஸ் வெங்கட் கூறினார்.

சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்களுடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம்.

நான் திமிர் பிடித்த திமுக காரன், என்று அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ