சப்தகிரி விரைவு ரயில் உள்பட 6 ரயில்களில் நாளை முதல் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சென்னை, 29 மார்ச் (ஹி.ச) கோடை விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்களில் நெரிசலை குறைக்கும் விதமாக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, வழக்கமான ரயில்களில் பயணிகள் தேவையைப் பூ
Additional coaches to be temporarily attached


சென்னை, 29 மார்ச் (ஹி.ச)

கோடை விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்களில் நெரிசலை குறைக்கும் விதமாக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இதுதவிர, வழக்கமான ரயில்களில் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்ய வசதியாக. கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும். அந்த வகையில், 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படவுள்ளன.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் ஏசி அதிவிரைவு ரயிலில் (22207) மார்ச் 31ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. மறு மார்க்கத்தில், இந்த ஏசி அதிவிரைவு ரயிலில் (22208) ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்- திருப்பதிக்கு இடையே இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயிலில் (16053- 16054) கூடுதலாக ஒரு இருக்கை வசதி கொண்ட (சேர்கார்) பெட்டி மார்ச் 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்- திருப்பதிக்கு இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (16057-16058) மார்ச் 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை ஒரு இருக்கை வசதி கொண்ட (சேர்கார்) பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்- ஈரோடுக்கு இயக்கப்படும் ஏற்காடு அதிவிரைவு ரயிலில் (22649) ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை ஒரு 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கூடுதலாக இணைக் கப்படும். மறுமார்க்கத்தில், இந்த விரைவு ரயிலில் (22650). மார்ச் 29ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஒரு பெட்டி கூடுதலாக சேர்க்கப்படும்.

இதுதவிர, சென்னை செனட்ரல்- சார்லபள்ளி இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் ஒரு 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியும், ராமேசுவரம் மங்களூரு சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில் 2 ஏசி மூன்றடுக்கு பெட்டியும் சேர்க்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் கோடை கால விடுமுறையை முன்னிட்டு, இந்த கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுவதன் மூலம், பயணிகளின் நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b