Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
மயிலாப்பூர் காரனீஸ்வரர் தெருவில் வசித்து வரும் ஆ. சிவசங்கர் என்பவரின் வீட்டின் கீழ்தளத்தில் செயல்பட்டு வரும் சிறிய சாய் பாபா கோவிலில் கடந்த 13ஆம் தேதி மாலை சுமார் 3 மணியளவில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்திலேயே, எவ்வித தயக்கமும் இன்றி நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை திருடிச்சென்றுள்ளார்.
திருடப்பட்ட உண்டியலில் சில ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மயிலாப்பூர் E1 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் வழங்கப்பட்டிருந்தாலும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சமீப நாட்களாக மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ