அ.தி.மு.க கூட்டணியில் எந்த சிறு கடுகளவு பிரச்சனை கூட இல்லை - புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமியை சாடிய இபிஎஸ்
தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.) நெல்லை, குமரி, சங்கரன்கோவில், கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். விமான நி
இபிஎஸ்


தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.)

நெல்லை, குமரி, சங்கரன்கோவில், கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமான மூலம்

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ;

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேரடியா சென்று மக்களின் சந்தித்து வாழ்த்து சேகரிக்க

திட்டமிட்டு உள்ளோம்.

தென் மாவட்டங்களில் 2023ல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் திமுக சென்னை சென்னையை போல் நினைத்து நடவடிக்கை

எடுக்கவில்லை.

ஆனால் அதிமுக ஆட்சி இருக்கும் போது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

விடுத்தவுடன் ஐஏஎஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு

நடவடிக்கை எடுத்தோம். ஆனால் திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் தான் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை போன்ற மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டது.

நான் உடனடியாக தூத்துக்குடி வந்து மக்களை சந்தித்தேன்.. ஆனால் தமிழக முதல்வர்

மு க ஸ்டாலின் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை..

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 5 நாட்கள் கழித்து தான் மக்களை சந்தித்தார். அதேபோன்று அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகரிலுள்ள பக்கில் ஒடை 80 சதவீதம்

பணிகள் நிறைவேற்றப்பட்டு இருந்தது பின்னால் திமுக ஆட்சியில் 20% நிறைவேற்றி

இருந்தால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு வந்திருக்காது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது சந்தி சிரிக்கிறது. திமுக

கூட்டணியில் உள்ளவர்கள் கூட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டது என்று

குறிப்பிடுகின்றார்கள். தூத்துக்குடியில் கூட 12 ஆம் வகுப்பு மாணவி கொலை

செய்யப்பட்டார். இதெல்லாம் இங்கு நடந்த சம்பவம். இது தான் சான்று.

விஜய் வேட்பாளர் அறிவிக்கும்போது இருமுனை போட்டி தான் என்று கூறி

இருக்கின்றார்? இது குறித்த கேள்விக்கு,

அவர் சொன்னா சொல்லிட்டு போறாரு. தேர்தல் முடிந்தால் தான் தெரியும்..

திமுக கூட்டணி 23 நாட்கள் பேச்சுவார்த்தை பேசிக்கொண்டு இறுதி செய்யப்பட்டது.

திமுக காங்கிரஸ் 18 நாட்கள் வார்த்தை போர். திமுக கூட்டணியில் மன வருத்தத்தில்

இருப்பதாக மதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள். அழுது கொண்டே சிரிக்கிறேன் என்று அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறி இருக்கிறார்.

ஆனால், அதிமுக கூட்டணி எந்த சிறு அளவு கூட பிரச்சனை இல்லை.

புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி நேரடியாக கேட்காமல் வேறு ஒருவர் மூலம் 10 சீட் கேட்டார். பின்னர் 5 சீட்டு கேட்டார். ஆனால், எங்களால் இயலாது என்றி

விட்டோம்.. 33 தொகுதி போட்டுவிட்டு 33 ஆயிரம் ஓட்டு வாங்கி இருக்கிறார்..

அவர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. தேவையானவரை அனுப்பினார் இயலாது

என்று விட்டோம்.

கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியில் போச்சு மாநிலத்தில் திமுக அப்போது இருந்தது.

அதிமுக ஆட்சியில் மீட்டு எடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டோம்

என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam