Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.)
வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தள வாகன நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அதிலிருந்து தப்பிக்க முயன்ற நால்வர் காயமடைந்தனர்.
டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்ட தகவலின்படி,
அதிகாலை சுமார் 2 மணியளவில், வீட்டின் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு இருசக்கர வாகனங்களில் தீப்பற்றி எரிவதாக அவசர அழைப்பு பெறப்பட்டது.
தீ வேகமாக பரவியதால், வீட்டின் முதல் தளத்தில் இருந்த நால்வர் உயிர் காக்க கீழே குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். வீட்டு வளாகத்தில் இருந்த பிறர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தீயணைப்பு பணிகளில் மொத்தம் 11 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
தீ விபத்து அதிகாலை 3:50 மணியளவில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM