Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 மார்ச் (ஹி.ச.)
கோவை அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சிவசுரேஷ் இளைஞர் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் இலவச திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்து வரும் அவர்,தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்ல தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது அவசியம் என கூறி வருகிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவசுரேஷ்,
தமிழ்நாட்டின் முழுமையான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, மாநிலத்தின் அனைத்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்தனி வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி மையங்களை உருவாக்கி மொத்தம் 2.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாபெரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோர்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரித்து, குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறினார்.
அரசுடன் இணைந்து,சிறு குறு,செயற்கை நுண்ணறிவு, விவசாயம், மீன்வளம் மற்றும் உற்பத்தி என அனைத்து துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக கூறிய அவர்,குறிப்பாக பெண்களுக்கான சுயதொழில் மற்றும் வருமான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அவர் கூறினார்.
Hindusthan Samachar / Durai.J