Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 மார்ச் (ஹி.ச)
நமது நீண்ட நாள் முயற்சியின் பலனாக, இன்று முதல் சென்னை – தூத்துக்குடி இடையே கூடுதலாக இரவு நேரங்களிலும் விமான சேவை தொடங்கவுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தற்போது இயங்கி வரும் விமான சேவைக்கு கூடுதலாக புதிய இரவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
புதிய சேவையின் படி, நாள்தோறும் சென்னையிலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 7.55 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடையும்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் அதே விமானம் இரவு 9.45 மணிக்கு மீண்டும் சென்னையை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய இரவு விமான சேவை தொடங்கப்படுவதன் மூலம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களை தலைநகர் சென்னையுடன் இரவு நேரங்களிலும் இணைக்கும் வசதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழில், வணிகம், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக அடிக்கடி சென்னை – தென் மாவட்டங்கள் இடையே பயணம் செய்யும் பொதுமக்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தென்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்த புதிய விமான சேவை வலுசேர்க்கும் என நம்புகிறேன் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ