Enter your Email Address to subscribe to our newsletters

கர்நாடகா, 29 மார்ச் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் பகுதியில் உள்ள சமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சாகர் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவரது மனைவி பூஜா.
இந்த நிலையில், பூஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரிதம் ரெட்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மேலும் இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென் றும் வீட்டில் ஆட்கள் இல்லாதபோதும் தனிமை யில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
பின்னர் 2 பேரும் வீட்டை விட்டு 3 முறை வெளியே சென்று தனியாக வாழ முயற்சி செய் துள்ளனர். ஆனால் பெரியவர்களும், கிராம பஞ்சாயத்து தலைவர்களும் தலையிட்டு 3 முறையும் பூஜாவை, கணவர் சாகருடன் சேர்த்து வைத்தனர்.
ஆனாலும் பூஜா கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் சாகர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ முடியாது என நினைத்த பூஜா கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதன்படி மகேஷ் என்ற நபருக்கு பிரிதம் ரெட்டி ரூ. 1 லட்சம் பணம் கொடுத்து சாகரை கொலை செய்ய துண்டியுள்ளார். அதற்கு பூஜாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
பின்னர் மகேஷ், சாகைரை செல்போனில் தொடர்புகொண்டு, வாடகைக்கு கார் ஓட்ட அழைத்தார். இதனை நம்பி சென்ற சாகரை மகேஷ் சுத்தியலால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து சாகரின் உடலை காரில் ஏற்றி, அவர்கள் தயாராக வைத்திருந்த ஆட்டோ ஒன்றில் மோதி கொலையை விபத்துபோல் சித்தரித்தனர். விபத்து பற்றி அறிந்த யாதகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் நடந்தது இல்லை என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
மேலும் சாகரின் செல்போன் அழைப்புகள் மூலம் கூலிப்படையை சேர்ந்த மகேசை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் கள்ளக்காதலுடன் சேர்ந்து பூஜா, தனது கணவர்சாகரை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam