திமுகவை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் கூட்டணியின் ஒரே நோக்கம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்
பழனி, 29 மார்ச் (ஹி.ச.) பழனி புலிப்பாணி ஆசிரமத்திற்குள் யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகளில் ஈடுபட்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது, பழனி தண்டாயுதபாணி சாமியிடம் தமிழக மக்கள் அனைவரும்
ட


பழனி, 29 மார்ச் (ஹி.ச.)

பழனி புலிப்பாணி ஆசிரமத்திற்குள் யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகளில் ஈடுபட்ட

மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசியதாவது,

பழனி தண்டாயுதபாணி சாமியிடம் தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும், இந்த திமுக ஆட்சியிலிருந்து மக்கள் விடுதலை பெற்று, அவர்களுக்கு ஒரு நல்ல விடியற்காலம் பிறக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டேன். தமிழகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்துக் கேட்டபோது,

திமுகவிற்குள் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்குவதில் அவர்களுக்குள் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

பல கட்சிகள் விருப்பமில்லாமல்தான் அந்தக் கூட்டணியில் நீடிக்கின்றன. அந்த குழப்பத்தால்தான் பட்டியல் வெளியாகத் தாமதமானது.

செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிடாதது குறித்துப் பேசிய அவர்,

கரூரில் செய்த முறைகேடுகளால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். அங்கே நின்றால் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற பயத்தினால்தான் அவர் கோயம்புத்தூருக்கு மாறியிருக்கலாம் என்றார்.

பழனி அல்லது திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக போட்டியிடுமா என்ற கேள்விக்கு,

எந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதைத் தேசிய தலைமைதான் முடிவு

செய்யும்.

எங்களைப் பொறுத்தவரை இது தனித்தனித் தொகுதிகளுக்கான தேர்தல் அல்ல.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான தேர்தல். திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. அதற்காகத் தீவிரமாக வேலை செய்து வருகிறோம் என்றார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு,

அவர் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம், ஆனால் இறுதி முடிவைத் தலைமை எடுக்கும் என்று பதிலளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்துக் கேட்ட போது,

தற்போது தேர்தல் ஆணையத்தின் விதிகள் அமலில் உள்ளன.

அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.

பாஜக-வும் ஆன்லைன் மூலமாகவே அனுமதி பெற்று வருகிறது. இதை வைத்து விஜய் தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொள்ள முயல்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது.

என எல். முருகன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J