மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தேனியில் நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல்
தேனி, 29 மார்ச் (ஹி.ச.) மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறிய
மகாவீர் ஜெயந்தியையொட்டி தேனியில் நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல்


தேனி, 29 மார்ச் (ஹி.ச.)

மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், தனியார் மதுபான பார்கள் அனைத்தும் நாளை மறுநாள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மதுவிற்பனை எதுவும் அன்றைய நாளில் நடக்கக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் மதுபான கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM