மேலூர் அருகே வடக்கு செல்லியம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் விழா
மதுரை, 29 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டி - அரியப்பன்பட்டியில் அமைந்துள்ள வடக்குவா செல்லியம்மன் கோயிலில் பங்குனி மாத பொங்கல் திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு வெள்ளி மலையாண
பொங்கல் விழா


மதுரை, 29 மார்ச் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டி - அரியப்பன்பட்டியில்

அமைந்துள்ள வடக்குவா செல்லியம்மன் கோயிலில் பங்குனி மாத பொங்கல் திருவிழா

இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இத்திருவிழாவை முன்னிட்டு வெள்ளி மலையாண்டி கோயில் அருகிலுள்ள மந்தையிலிருந்து

பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பெண்கள் வெங்கல பானைகளில் பொங்கல் மற்றும்

பூஜை பொருட்களை சுமந்தும் ஊர்வலமாக புறப்பட்டு சுமார் ஒன்றரை கிலோமீட்டர்

தொலைவு நடைபயணமாக சென்று செல்லியம்மன் கோயிலை அடைந்தனர்.

தொடர்ந்து, கோயில் முன்பு பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மேலும் பலர் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில்

மாவிளக்கு ஏற்றியும் சிறப்பு பூஜைகள் செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு

அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து

வழிபட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam