தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி, 29 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வீடு வீடாக தாமரை சின்னத்திற்கு
அமைச்சர் நமச்சிவாயம்


புதுச்சேரி, 29 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக

வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

இவர்

தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வீடு வீடாக தாமரை

சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இன்று தேத்தம்பாக்கம் பகுதியில்

வாக்கு சேகரித்தார்.

அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அவர் கூறியதாவது ;

2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை

பட்டியல் இட்டு பேசினார்.மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும்

விளையாட்டு மைதானம் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்த சாதனையால் இளைஞர்கள்

பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

மேலும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 ஆம் தேதி வருகிறார் அவர் பல்வேறு பகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தெருமுனை

பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

தொடர்ந்து 6 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா

மண்ணாடிபட்டு தொகுதி சாலை பிரச்சாரம் செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு

தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளருக்கு வாக்குகளை சேகரிக்கிறார் என உள்துறை

அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam