Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 மார்ச் (ஹி.ச)
திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் முக்கியமான தேர்தல் அறிக்கை இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடே... தலைப்பு செய்திக்கு ரெடியா?” என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு உருவாகியுள்ளது. தேர்தல் அறிக்கையில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, கல்வி, நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், இந்த முறை திமுக தேர்தல் அறிக்கை பொதுமக்களை நேரடியாக கவரும் வகையில் இருக்கும் எனவும், அதற்கான சைகையாகவே ஸ்டாலின் இந்த பதிவு வெளியிட்டுள்ளார் எனவும் கட்சித் தரப்பினர் கூறுகின்றனர்.
இதனால் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் திமுக தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ