குஜராத்தில் நடைபெறும் மாதவ்பூர் மேளாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு
புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.) குஜராத்தின் போர்பந்தர் மாதவ்பூர் மேளா மூன்றாவது நாளை அடைந்த மாதவ்பூர் மேளா, ருக்மிணி மற்றும் கிருஷ்ணரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு மனித உறவுகள் மற்றும் கலாச்சார பிணைப்புகளை கொண்டாடும் பன்முக கலாச்சார விழாவாக
குஜராத்தில் நடைபெறும் மாதவ்பூர் மேளாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு


புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.)

குஜராத்தின் போர்பந்தர் மாதவ்பூர் மேளா மூன்றாவது நாளை அடைந்த மாதவ்பூர் மேளா, ருக்மிணி மற்றும் கிருஷ்ணரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு மனித உறவுகள் மற்றும் கலாச்சார பிணைப்புகளை கொண்டாடும் பன்முக கலாச்சார விழாவாக நடைபெற்று வருகிறது.

நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரியப் பாடல்கள், வணிகக் காட்சி மற்றும் ஷாப்பிங் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாதவ்பூர் மேளாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், இந்த விழாவின் கலாச்சார முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,

குஜராத்தின் போர்பந்தரில் நடைபெற்று வரும் மாதவ்பூர் மேளாவிற்கு எனது நல்வாழ்த்துக்கள்.

இந்த உயிரோட்டமான கொண்டாட்டம் நமது பெருமைமிக்க கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதோடு, குஜராத்திற்கும் வடகிழக்கிற்கும் இடையிலான காலத்தால் அழியாத கலாச்சாரப் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது.

இந்த விழா, 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு பாரம்பரியங்களை ஒன்றிணைக்கிறது.

இந்த மேளாவிற்கு வருகை தருமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்!.

என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM