Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
இயேசு கிறிஸ்துவின் மறைவு மற்றும் உயிர்ப்பிப்பை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திற்கு முன்பாக கிறிஸ்தவ மக்கள் தவக்காலம் என்ற பெயரில் அனுசரிப்பர்.
கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தொடங்கிய தவக்காலம் ஆனது வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இயேசு உயிர்ப்பிப்பு கொண்டாட்டத்துடன் நிறைவு பெறுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை தங்களின் அரசராக ஏற்று இஸ்ரேல் மக்கள் தங்கள் கையில் ஒலிவ மரக்கிளைகளை ஏந்தி, இயேசுவை கழுதை மீது அமர வைத்து ஜெருசலேம் நகர் முழுவதும் பவனி வருவார், இந்த நாளை கொண்டாடும் வகையில் தவக்காலத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவ மக்களால் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி முடிந்த தென்னங்குருதோலைகளை கையில் ஏந்தி கிறிஸ்துவ மக்கள் வசிக்கும் பகுதியில் பவனி வருபவர்.
40 நாட்கள் நடைபெறும் இந்த தவக்கால நிகழ்வில் முக்கிய அம்சமாக புனித வாரத்தின் முதல் நாளான இன்று ஓசன்னா பெருவிழாவை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தேவாலயங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை சாந்தோமில் உள்ள, புனித தோமையார் தேசிய திருத்தலத்தில் அதன் அதிபரும் பங்குத்தந்தையுமான வின்சென்ட் சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற குருதோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி பின்பு, ரோசரி தேவாலய சாலையில் உள்ள ராபெல்ஸ் பள்ளி வளாகத்தில் இருந்து குருதோலைகளை ஏந்தி 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பவனியாக சாந்தோம் தேவாலயம் வந்தடைந்தனர்.
அதே போல் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தென்னிந்திய கிறிஸ்தவ சபையின் சார்பில் மெக்காபுரத்தில் தொடங்கிய குரு தோலை பவனி நல் மேய்ப்பர் தேவாலயத்தில் நிறைவு பெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி இறை வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து திருத்தல அதிபர் வின்சென்ட் சின்னதுரை கூறியதாவது…..
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவை இஸ்ரேல் மக்கள் அரசராக ஏற்றுக்கொண்ட ஓசன்னா பெருவிழாவை முன்னிட்டு தவக்காலத்தின் முக்கிய பகுதியான புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
இதே வாரத்தில் தான் உலக மக்களின் பாவத்திற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வும், அதனை தொடர்ந்து அவர் உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழாவும் நடைபெற்று உள்ளது.
இந்த புனித வார திருப்பதியில் உலக நாடுகளின் அமைதி வேண்டியும், போர் சூழல் நீங்கி மக்கள் சமாதானத்துடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J