Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலத்தின் நிறைவைக் குறிக்கும் கடைசி ஞாயிற்றுக்கிழமையாக குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனிகள் நடைபெறுகின்றன.
இந்த நாளில், கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியபடி இறைபாடல்கள் பாடிக்கொண்டு ஊர்வலமாக செல்லுவது வழக்கம்.
தென்னிந்திய திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, இந்திய நற்செய்தி திருச்சபை உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பவனிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதை முன்னிட்டு, ஒவ்வொரு தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
மேலும், சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் பல திருச்சபைகள் இணைந்து ஒருங்கிணைந்த குருத்தோலை ஞாயிறு பவனிகள் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM