சாதி ரீதியாக செயல்பட்டு கலவரத்தை தூண்டு வகையில் செயல்படும் பங்குத் தந்தை - முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்
ராமேஸ்வரம், 29 மார்ச் (ஹி.ச.) ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் வேர்க்கோடு சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்த
சூசையப்பர் ஆலயம்


ராமேஸ்வரம், 29 மார்ச் (ஹி.ச.)

ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு பல்வேறு சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வேர்க்கோடு சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தையாக உள்ள தாமஸ் பரிபாலன் என்பவர் வரக்கூடிய மக்களிடம் சாதி ரீதியாக செயல்பட்டு கலவரத்தை தூண்டும் வகையாக ஈடுபட்டு வருவதாக கூறி பங்குத் தந்தையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பங்குச்சந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தி உரிய புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உத்தரவாதம் அளித்தனர்.

இதனையடுத்து பங்கு தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழிகாட்டியாக செயல்படக்கூடிய பங்குத்தந்தை சாதி ரீதியாக செயல்படுவதால் இவரை வேறொரு இடத்திற்கு மாற்ற சிவகங்கை மாவட்ட ஆயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam