தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கோரி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, 29 மார்ச் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் டாக்டர் கிருத்திகாதேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே மூன்று முறை வெற்றி பெற்ற எஸ்.ஆர்.ராஜாக்கு மீண்
Supporters of Tambaram MLA S.R. Raja Stage Protest


சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம்

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் டாக்டர் கிருத்திகாதேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே மூன்று முறை வெற்றி பெற்ற எஸ்.ஆர்.ராஜாக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டுமெனக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதாரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபோது, வேட்பாளரை மாற்ற வேண்டும் மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவிற்கு சீட் வழங்க வேண்டும் என ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

தாம்பரத்தில் வேட்பாளரை மாற்றாவிட்டால் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்வோம் என்றும் எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / vidya.b