Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுகவில் ஏற்கெனவே 150 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது.
கூட்டணி கட்சிகளுக்கு 67 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ள நிலையில், 167 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் உள்ளிட்ட 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்:
1. ஆயிரம் விளக்கு - முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி
2. அண்ணாநகர் - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா
3. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஆதிராஜாராம்
4. திட்டக்குடி (தனி) - முருகுமாறன்
5. துறைமுகம் - ராயபுரம் ஆர்.மனோ
6. விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி
7. தியாகராய நகர் - சத்தியநாராயணன்
8. வேளச்சேரி - அசோக்
9. சோழிங்கநல்லூர் - கந்தன்
10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஆர்.எஸ்.ராஜேஷ்
11. வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார்
12. திருச்சுழி - ராஜவர்மன்
13. ஆலந்தூர் - சரவணன்
14. கொளத்தூர் - சந்தானகிருஷ்ணன்
15. திரு.வி.க நகர் (தனி) - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
16. எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி
17. ஆலங்குடி - விமல்
ஆகியோர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b