Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சென்னையில் அக்கட்சித் தலைவர் விஜய் நேற்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், நிகழ்ச்சியை நடத்துவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக முறைப்படி விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி தரப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதன்காரணமாக, த.வெ.க வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை நேற்று நடத்த இயலவில்லை.
அதே ஓட்டலில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.
Hindusthan Samachar / vidya.b