Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்களின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று வெளியிட்டார்.
அதில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் அவரது மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு திருவிக நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர் திருவிக நகர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்.
திரு.வி.க நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டி என அ.தி.மு.க அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர், நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
திரு.வி.க.நகர் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்காக சட்டசபையிலும் குரல் கொடுத்தார்.
வரும் தேர்தலில் NDA கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். எனக்கு இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.
எனது கணவர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக நான் போட்டியிடுகிறேன்.
திருவிக நகர் தொகுதியில் செல்வாக்கு அதிகமாக உள்ளது.
ஜெய் பீம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b