புதுச்சேரியில் ஏப்ரல் 5 ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் - அனுமதி கோரி மனுத்தாக்கல்
புதுச்சேரி, 29 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நி
TVK Leader Vijay to Campaign


புதுச்சேரி, 29 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

மேலும், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி, மாநில சட்டம் ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு அளித்துள்ளனர்.

மனுவின்படி, ஏப்ரல் 5 ஆம் தேதியில் புதுச்சேரியில் காலாப்பட்டு நுழைவாயில், முதியால்பேட்டை மணிகுண்டு, அதிதி ஹோட்டல் சந்திப்பு, உப்பளம் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் மார்ச் 28 ஆம் தேதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால், 300 பேர் மட்டுமே கூடுவதற்கு உகந்த இடத்தில் 3,000 பேருக்கு அனுமதி தர முடியாது என த.வெ.க-வின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b