தொகுதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் - த.வெ.க-வினர் சென்னையில் போராட்டம்
சென்னை, 29 மார்ச் (ஹி.ச) சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் கொள்கை தலைவர்கள் புகைப்படங்களுக்கு விஜய் மலர் தூவி மரி
TVKV Members Stage Protest in Chennai


சென்னை, 29 மார்ச் (ஹி.ச)

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்சியின் கொள்கை தலைவர்கள் புகைப்படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் 234 தொகுதிகளுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கே.வி.குப்பம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்காமல் புதிதாக கட்சியில் வந்தவருக்கு சீட்டுக் கொடுத்துள்ளார்கள் என தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்'பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க-வினர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் கூறியதாவது,

நாங்கள் தொகுதியில் என்னென்ன வேலைகள் செய்தோமோ அதற்கான எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது.

எங்களை நேர்காணல் செய்யவில்லை. நேற்று இரவு வரை போராடி பார்த்தோம். எங்களுக்கு சீட்டு கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் இன்னைக்கு காலையில் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

எங்களுக்கு சீட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கே.வி.குப்பம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்காமல் புதிதாக கட்சியில் வந்த தென்றல் குமார் என்பவருக்கு சீட்டு கொடுத்துள்ளார்கள்.

அதனால் எங்கள் உரிமை கேட்பதற்காக விஜய் இடம் வந்திருக்கிறோம். எங்களுடைய உரிமையை விஜய் கேட்க வேண்டும்.

கேட்கும் வரை நாங்கள் இங்குதான் போராட்டம் பண்ணுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b