திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுக
முருகன் கோயில்


தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு

முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில்

காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று கோவில் நடை அதிகாலை 4

மணிக்கு திறக்கப்பட்டது.

4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு

உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்

என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள்

குவிந்தனர்.

கோவில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி,

பொது மற்றும் ரூ.100 கட்டன தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரம் வரிசையில்

காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள்

குவிந்ததால் கோவில் வளாகம், கடற்கரை, உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில்

பக்தர்கள் காணப்பட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam